நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 039

குறிஞ்சி


இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.

சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் . . . . [05]

தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல; நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் . . . . [10]

கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.
- மருதன் இளநாகனார்.

பொருளுரை:

நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்குமாறு அதன் வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண்!;