நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 183

நெய்தல்


வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,
உமணர் போகலும் இன்னாதாகும்- . . . . [05]

மடவை மன்ற- கொண்க!- வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல, . . . . [10]

வாழாள் ஆதல் சூழாதோயே.
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

கொண்கனே! மருத நிலத்தின்கணுள்ள உப்பு வாணிகர் தமது நாட்டில் விளைந்த வெளிய நெல்லைப் பண்டிகளிலேற்றிச் சென்று கொடுத்து அந்நெல் விலையாக அயனாடாகிய நெய்தனிலத்திலே விளைந்த உப்பைப் பெற்றுக்கொண்டுபோய் விலைகூறி; நீண்டநெறியிலே பண்டிகளுடனே நிலாப்போன்ற மணற்பரப்பைக் கடந்து பிரிந்து போதலாலே; தனியே அவ்விடத்திலிருப்பதை வெறுத்த சுற்றத்துடனே அங்குநின்றும் போந்து அவ்வுப்பு வாணிகர் செல்லுதலும்; அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றொழிந்தமை அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதொன்றாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதொன்றாகும்; அங்ஙனம் துன்பந்தருதற்கு இடங்கள்தோறும் துன்புறுத்தி வருகின்ற கூதிரின் ஊதைக்காற்றுடனே; நீ இல்லாது தமியேமாகிய காலத்துப் போதருகின்ற மாலைப்பொழுதும் ஏதுவாகவுடைத்தாயிராநின்றது; அதனை அறிந்து வைத்தும் நீ பிரியின் மீன் இனத்தை மிகத்தின்ற வெளிய நாரை மிதித்த நீர்வற்றிய குளத்து நெற்தன் மலர்போல; இவள் ஒருநொடிப் பொழுதும் உயிர் வைத்திருப்பவள் அல்லள், அங்ஙனம் இறந்துபடும் இவளது செயலை நினையாத நீ அம்மவோ! திண்ணமாக அறியாமையுடையையாவாய்;