நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 085

குறிஞ்சி


தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், . . . . [05]

ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல- தோழி!- சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் . . . . [10]

ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!
- நல்விளக்கனார்.

பொருளுரை:

தோழீ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தெளிந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக;