நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 113

பாலை


இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே . . . . [05]

சேறும், மடந்தை!' என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர,
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் . . . . [10]

ஆம்பல்அம் குழலின் ஏங்கி,
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!
- இளங்கீரனார்.

பொருளுரை:

மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; அவள் தான் தன்னுடைய நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்கள் வருத்தம் மிகப்பின்னுகின்ற (கரிய) கூந்தலை விரித்து அதனுள்ளே மறைந்து நின்று பெரிதும் கலக்கமடைந்து; உதியஞ் சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தின்கண்ணே; களம்பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல; வாய்விட்டழுது கலங்கிய வருத்தமுறுகின்றவளினுடைய துன்பங்கொண்ட பார்வைகள் தாம்; மானினம் நிமிர்ந்து தழையுண்ணுதலினாலே சிறிது வளைந்த உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தை மரங்களின் மேலே களியையுடைய பசிய காய்; பரல் பொருந்திய சிறிய நெறியின்கண் உதிர்ந்து நிறையப் பரவாநிற்கும்; பெரிய சுரத்தைக் கடந்தும் ஈங்கு எம்முன்னே அடைய வந்தன; இஃதென்ன வியப்பு!;