நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 053

குறிஞ்சி


வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் . . . . [05]

கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியாது ஆடப் பெறின், இவள் . . . . [10]

பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே!
- நல்வேட்டனார்.

பொருளுரை:

தோழீ! தலைமகன் வைவிடுதலானே நீ துன்புற்றிருந்தனை இன்ன காரணத்தால் நீதான் இங்ஙனமாயினை என்று கூறாமல் யான் அஞ்சி அதனை மறைத்திருப்பவும். அன்னை வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்தன. அன்னை என்னை நோக்கி ஆகாயத்தில் மிகவுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தில் மிக்க இடியோசையையுடைய மேகம் மழைபெய்யத் தொடங்கி நள்ளிருளில் மிக்க மழை பொழிந்ததனாலே; கற்கள் நிரம்பிய காட்டின் கண் ஓடும் யாற்றிலே மரங்கள்காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்த்த பூங்கொத்துக்களையும் அடித்துக்கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது; இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் மருந்துமாகும்; அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி ஆண்டுள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி நீராட்டத்து வெறுப்பின்றி ஆடப்பெற்றால்; இவள் மெய்யின் நடுக்கமுந் தீர்குவள், ஆதலால் ஆங்குச் செல்வீர்களாக என்று கூறினள்; ஆதலின் அவள் தான் நமது ஒழுகலாற்றை முன்னமே அறிந்து வைத்தனள் கொல்? அன்றி அருளினாற் கூறினள் கொல்? நம் அன்னை கருதியது யாது கொல்? ஆராய்ந்து காண்!: