நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 167

நெய்தல்


தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த . . . . [05]

பயன் தெரி பனுவற் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா- பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள் . . . . [10]

பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல; கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே!; நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய பசலையை; நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக!