நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 284

பாலை


பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் . . . . [05]

எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல, . . . . [10]

வீவதுகொல் என் வருந்திய உடம்பே?
- தேய்புரிப் பழங்கயிற்றினார்.

பொருளுரை:

என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதிப்பாட்டை ஆராய்கையாலே 'ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள்' என்று கூறாநிற்கும்; அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!