நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 103

பாலை


பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.

ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் . . . . [05]

பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், . . . . [10]

மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.
- மருதன் இள நாகனார்.

பொருளுரை:

என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக!;