நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 046

பாலை


பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் . . . . [05]

அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
நன் வாய் அல்லா வாழ்க்கை . . . . [10]

மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

ஐயனே! என் தோழியின் கலன்களணிந்த மார்பகம் தனியே கிடந்து வருந்தாநிற்ப கொன்றை அம தீம்கனி பாணர் அயிர்ப்புக் கொண்டு அன்ன பறை அறை கடிப்பின அறை அறையாத் துயல்வரகொன்றையின் இனிய சுவையையுடைய கனிகள் பாணர் ஐயங் கொள்ளும் படியவாய் அவர் தமது பறையை முழக்குங் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு கிளைகள் மிகவும் துவண்டாட வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்துகொடிய காற்று வீசாநின்ற மூங்கில் மிக்க இடத்தையுடைய துன்பமிக்குள்ள செல்லுதற்கரிய சுரத்திற்போய்; நன்மை வாய்த்தலில்லாத வாழ்விற்குரிய நிலையற்ற பொருளீட்டுதலிற் பிணித்தவுள்ளத்தோடு 'யாம பிரிதும்' என்று நீயிர் கூறுதலானே; இவ்வுலகத்து நாள்தோறும் வில்லினின்று எய்யப்படும் கணை சென்று குறியிலே தைக்கப்படு மளவையின் அக்கணை செல்லும் நிழல் எவ்வண்ணம் விரைவிற் சென்று அழியுமோ அவ்வண்ணம் இன்பமும் இளமையும் கழியாநிற்கும், அவற்றைக் கண்டிலீரோ என்றல் அரிதேயாகும், அவை யாவர்க்கும் தெரிந்திருத்தலாலே; ஆதலின் அந் நிலையாமை யொன்றனையே விரும்பி ஆராய்ந்து அவ்வின்பமும் இளமையுங் கழியுந் துணை இவளைப் பிரியீராய் உறைவீராக!;