நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 092

பாலை


பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் . . . . [05]

பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

தோழீ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறட்சியுற்ற குன்றத்துச்சியின் பக்கத்திலுள்ள வேட்டுவச்சேரியை அடுத்த அகன்ற வாயையுடைய கிணற்றினின்று; பயனைத் தருகின்ற ஆனிரை யுண்ணுமாறு எடுத்து வைத்த தெளிந்த நீர்ப்பத்தரைப் புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றுடனே நீர் உண்ண வேண்டி; அப்பத்தரின் வாயை மூடிய விற்பொறியை முறித்துப் போகட்டு அவற்றை உண்பித்துச் செல்லாநிற்கும் கொல்லுந் தொழிலையுடைய களிற்றொருத்தலையுடைய சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்; தாம் சென்றிறுத்த விடத்தும் நம்மைக் கருதினாரில்லைபோலும்; அவர் திறத்து வருந்தியாவதென்?