நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 034

குறிஞ்சி


தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன் . . . . [05]

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக, . . . . [10]

மடவை மன்ற, வாழிய முருகே!
- பிரமசாரி.

பொருளுரை:

முருகவேளே! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக!; கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; திண்ணமாக நீ அறியாமையுடையை காண்!