நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 273

குறிஞ்சி


தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.

இஃது எவன்கொல்லோ - தோழி! - மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், . . . . [05]

வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? . . . . [10]
- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்.

பொருளுரை:

தோழீ! நின் உடம்பெங்கும் பரந்து துன்பமிக்கு மயங்கிய துயரத்தை நோக்கி; நம்பாலுள்ள விருப்பத்தாலே தானும் வருத்தமுற்று நம்மிடத்தில் நிகழ்ந்தது அறியாது முருகவேளுக்கு வெறியெடுத்த நம் அன்னையை நோக்கி; இது முருகணங்கு என்று வேலன் கூறாநிற்கும் என்பர்; ஆதலின் நிறமிக்க பெரிய யானை நீர்முகந்து கொள்கின்ற நெடிய சுனையின் கண்ணே அமைந்து; நீண்டுற்று என் கண்போல்கின்ற நீலமலர்; தண்ணியவாய் மணமிகும் மலைநாடனை நினைக்குந்தோறும்; அவன் இயல்பாகத் தந்த கவலையானது எனது நெஞ்சை நடுங்கச் செய்யாநின்றது; இஃது இனி எப்படியாகி முடியுமோ?