நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 041

பாலை


பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.

பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ . . . . [05]

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. . . . . [10]
- இளந்தேவனார்.

பொருளுரை:

விளங்கிய கலன் அணிந்த அரிவையே; இரவின்கண் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர் உண்ணவேண்டி; நீ நெய்யை அளாவவிட்டுக் கொழுவிய தசையைச் சமைத்ததனாலாகிய புகைபடிந்த நெற்றியின்கண் சிறிய நுண்ணிய பலவாய வியர்வை நீர் தோன்றப் பெற்ற; குறுகிய நடையொடு சென்ற நின் புணர்ச்சியை அக்காலத்து விரும்பினவர்; பசிய கண்களையுடைய யானை தன் பருத்த காலால் உதைத்தலிற் பொடிபட்ட வெளிய மேலிடத்தையுடைய பாழ்நிலத்திலுள்ள விடு புழுதி மூழ்கப்பெற்று; சுரத்தின்கண் வந்து வருந்திய வருத்தமெல்லாம்; மெல்ல நடந்து பருத்திகள் சூழ முளைத்திருக்கின்ற சிறிய கிணற்றிற் சென்று தணித்துக் கொள்ளா நிற்கும்; நெடிய மிக்க சேணிடத்தேகி வருந்தாநிற்பர் போலும்; அங்ஙனம் போய் வருந்துவதும் பின்னர் நின்னொடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டு அன்றோ? இதனை ஆராயாது வருந்துவது என்னை?