நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 062

பாலை


முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே- 'முள் எயிற்று, . . . . [05]

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? . . . . [10]
- இளங்கீரனார்.

பொருளுரை:

வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புண்ட மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஒலிக்கின்ற ஓசையானது; தறியிலே கட்டப்பட்ட யானை வருந்தி நெட்டுயிர்ப்பெறிந்தாற் போன்றது; கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரத்து நெறியில்; மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி; முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு; அத்திங்கள் இப்பொழுது யாண்டையதோ வெனில் முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளதாயிரா நின்றது என்று; யான் நினைத்திருந்தேன் அல்லனோ?