நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 266

முல்லை


தலைமகனைச் செலவுடன் பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும், . . . . [05]

எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல் - வாழியர், ஐய! - வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?
- கச்சிப்பேட்டு இளந்தச்சனார்.

பொருளுரை:

ஐயனே! வாழ்வீராக! நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ?