நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 287

நெய்தல்


காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல - கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், . . . . [05]

நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
'தேர் மணித் தௌ இசைகொல்?' என, . . . . [10]

ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
- உலோச்சனார்.

பொருளுரை:

வளைந்த கழியின் கண்ணே பசிய இலைகளையுடைய நெய்தன்மிக்க குளிர்ந்த நீரையுடைய கொண்கன்; அச்சஞ் செய்கின்ற முதலையின் நடுக்க முறுத்தும் பகைமைக்கும் அஞ்சானாகிக் காம மிகுதியால் இங்கு வந்தபொழுது; விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகை செய்து பசிய கண்ணையுடைய யானைப் படையொடு பகையரசன் அதன் புறத்தே தங்கப் பெற்றதனால்; அப் பகையரசனை உள்ளே புகுதவிடாதபடி நல்ல மதில்காவலுடையாரை யாம் பெற்றுடையோமென்று கருதியிருக்கின்ற பெருந்தன்மையுடைய உள்ளடைப்பட்டிருந்த வீரனைப்போல; கெடாத வன்கண்மையுடைய என்னெஞ்சமானது இப்பொழுது; செறிந்த இருளையுடைய நடுயாமத்திலே பறவையொலிப்பதைக் கேட்குந்தோறும்; நங்காதலன் ஊர்ந்து வருகின்ற தேரிலே கட்டிய மணியின் தெளிந்த ஓசையோ? என்று; ஊராரெல்லாரும் உறங்குகின்ற இராப்பொழுதினும் துயில் கொள்வதனை மறந்துளதாயிரா நின்றது.