நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 057

குறிஞ்சி


செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் . . . . [05]

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! . . . . [10]
- பொதும்பில் கிழார்.

பொருளுரை:

சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; அவை துயில்வதனைக் கண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; பெரிய மலை நாடனே!; சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக!