நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 327

நெய்தல்


வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே - காதல்அம் தோழி!
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து . . . . [05]

உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே - போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.
- அம்மூவனார்.

பொருளுரை:

என்பால் அன்பு மிக்க தோழீ! நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ?