நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 035

நெய்தல்


மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.

பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் . . . . [05]

இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் . . . . [10]

கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!
- அம்மூவனார்.

பொருளுரை:

பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக!; இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே;