நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 294

குறிஞ்சி


மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று - தோழி! - வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் . . . . [05]

கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!
- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்.

பொருளுரை:

தோழீ! மூங்கில் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவிய மலையிடமெல்லாம்; பழைமையாயுற்ற அறிவுடனே வலிமையும் மிகுதலாலே சினங்கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற்போன்ற; செவ்விய புறத்தையுடைய கொழுவிய அரும்பவிழ்ந்த காந்தள்; சிலம்பிடம் எல்லாம் மணங்கமழும் சாரலையுடைய இலங்குகின்ற மலைநாடனது; அகன்ற மார்பானது; ஆற்றற்கரிய தீயையும் ஆற்றுதற்கினிய காற்றையும் ஆகாயந்தான் பெற்றது போலக் களவுக்காலத்து அணித்தாகி எப்பொழுதும் இல்லாமையால்; நோய் செய்யும் தன்மையும்; இப்பொழுது வரைந்து கொண்டு களவுக் கை நெகிழாது அணைத்து முயங்கியிருத்தலானே இன்பமாந் தன்மையுமாகி யிராநின்றது; இது பொய்ம்மை யெனப் படுவதன்று; மெய்ம்மையே யாகும்.