நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 077

குறிஞ்சி


பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.

மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் . . . . [05]

சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், . . . . [10]

திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.
- கபிலர்.

பொருளுரை:

நெஞ்சே! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள்!;