நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 038

நெய்தல்


தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.

வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் . . . . [05]

புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. . . . .[10]
- உலோச்சனார்.

பொருளுரை:

தோழீ! கலங்கிய நீரையுடைய கடற்கழி சூழ்ந்த தோட்டங்களையுடைய 'காண்ட வாயில்'என்னும் ஊரிலுள்ள; தழைந்த முற்றிய பனையோலையோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியகத்து; பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல்மேட்டினையுடைய பக்கஞ் சூழ்ந்த ஒலிமிக்க எம்மூரானது; கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி மழைபொய்யாது பெய்தலானே வலைவளம் சிறப்ப; அவ்வலை வளத்தால் வந்தபொருளைப் பிற நாட்டிற்சென்று பரதமாக்கள் விலைக்குவிற்றுவர, இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் அப்பொருளை ஈந்து கரிய பனையின் இனிய கள்ளைப் பெற்றுண்பவராய் மகிழ்ந்திருக்கும், ஆர் கலி யாணர்த்து ஆயினும் நிரம்பிய ஒலியையுடைய புதுவருவாயினையுடைய தாயினும்; தொகுதி விளங்கிய நமது மெல்லிய கடற் சேர்ப்பன் நம்மைவிட்டுப் பிரிந்தகாலத்தில் நம்மூரானது பொலிவழிந்தாற் போல வருத்தமுடையதா யிராநின்றது; ஆதலின் யான் எங்ஙனம் வருந்தாது ஆற்றியிருப்பேன்?;